மணமேல்குடி வட்டார வள மையத்தில் 4 மற்றும் 5 ம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் - முன் திட்டமிடல் கூட்டம்




இன்று(25-09-2023) மணமேல்குடி  வட்டார வள மையத்தில் 4 மற்றும் 5 ம் வகுப்பிற்கான எண்ணும் எழுத்தும் -  முன் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது.

முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் அவர்கள் மற்றும் அறந்தாங்கி தொடக்கநிலை மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி வட்டார  வளமையத்தில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவத்திற்கான  4 மற்றும் 5 ம் வகுப்பு
முன் திட்டமிடல் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிக்கும் பணிமனை கூட்டம் தமிழ் பாடத்திற்கு தொடங்கியது.

மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய  திரு செழியன் அவர்களின் தலைமையில் தொடங்கியது.

மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய  திரு இந்திராணி அவர்கள் மற்றும் மணமேல்குடி வட்டார வளமையை மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இதில் தமிழ் பாடத்திற்கான கருத்தாளர்கள் கலந்து கொண்டு இது  மொழியோடு விளையாடு,  எதனாலே எதனாலே பாடல் மூலம் எழுத்துக்கள் அறிமுகம் செய்தல்,  முக்காலம் குறித்த அறிமுகம் செய்து வைத்தல் , அ முதல் ஔ வரை  தொடர்கள் அமைத்தல் செயல்பாடு குறித்த விளக்கட்டைகள் மற்றும் மாணவர்களை ஆயத்தப்படுத்தும் செயல்பாடுகள்,  பொன் மொழி புதிர் மின் அட்டைகளைக் கொண்டு எளிய முறையில் கற்பித்தலுக்கான உபகரணங்கள் தயாரித்தல் போன்ற  கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் தயாரிப்பு பணியில்   தலைமை ஆசிரியர்கள்  இந்திரா , தாமரைச்செல்வி, அமுதா, மதுரம் மற்றும் இடைநிலை ஆசிரியர் பவானி ஆகியோர் ஈடுபட்டனர்.   தொடர்ந்து ஆங்கிலம் கணிதம் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கான கற்றல் கற்பித்தல்  உபகரணங்கள் தயாரிப்பு பணிமனை  கூட்டம் நடைபெறும்







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments