பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்...காலாண்டு விடுமுறை நீட்டிப்பு!




ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்  முதல் பருவ தேர்வுகள் முடிந்த பிறகு, காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி, ஒன்று முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படும் என்று கூறப்பட்டது. அதேபோன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் 2 கட்டங்களாக எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறுகிறது. இதில் அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளதால் காலாண்டு விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 3 ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 9 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.ஆனால், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டபடி அக்டோபர் 3 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments