பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் தூய்மை பணி & மரக்கன்று நடுதல் துவக்க விழா




பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் தூய்மை பணி & மரக்கன்று நடுதல் துவக்க விழா நடைபெற்றது 

நோயற்ற வாழ்க்கைக்கு தூய்மையான சுற்றுப்புறம் அவசியம் காவல்துறை கூடுதல் ஆணையாளர்  அறிவுரை 

தென்னக இரயில்வே திருச்சி கோட்ட இரயில்வே முதுநிலை வணிக மேலாளர், திருச்சி கோட்ட இரயில்வே உபயோகிப்போர் ஆலோசனை குழு உறுப்பினர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை யின்படி பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கம், பட்டுக்கோட்டை ஹோஸ்ட் லயன் சங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகிய அமைப்புகள் இணைந்து பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா வார விழாவையும் மரம் நடும் துவக்க விழாவையும் நடத்தினார்கள் .

 பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவரும் திருச்சி கோட்ட இரயில்வே உபயோகிப்போர் குழு உறுப்பினருமான என் .ஜெயராமன் தலைமையேற்று விழாவை துவங்கி வைத்தார். லயன் சங்கத் தலைவர் ரெ.அன்பழகன் ரெட் கிராஸ் சங்கத் தலைவர் டி. சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க செயலாளர் சிவ. நாடிமுத்து வரவேற்புரை ஆற்றினார் .

புதுடில்லி காவல்துறை கூடுதல் ஆணையாளர் ஆர் .சத்தியசுந்தரம் ஐபிஎஸ் தூய்மை பணியையும் மரம் நடும் விழாவையும் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் .

அவர் பேசும்போது "மக்கள் ஆரோக்கியமாக வாழ தூய்மை மிக அவசியம். 
எனவே பொது இடங்களையும் , நமது நாட்டையும் தூய்மையாக பாதுகாக்க வேண்டும்.

 அதுபோல நம் நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நல்ல காற்றினை நாம் சுவாசிக்கவும் நிறைய மரங்களை நாம்  வளர்க்க வேண்டும்.
மரக்கன்றுகளை நடுவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து அவைகளை பாதுகாக்க வேண்டும் 
என்று கூறினார் 

நிகழ்ச்சியில் அனைவரும்  தூய்மை இந்தியா உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் 


அரசு நிறுவன நர்சிங் கல்லூரி மாணவிகள் 100 பேர் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகங்கள், ரயில் பாதைகள், சாலைகள் ஆகியவற்றில் உள்ள குப்பைகளை அகற்றினார்கள்.

 நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை நிலைய தலைமை அதிகாரி கே. மருது பாண்டியன் விதை அறக்கட்டளை நிறுவனர் சக்தி காந்த் பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் மரம் வளர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஆ ராமமூர்த்தி, வே. சுப்பிரமணி  ,கோ.சங்கர் ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் ஏ.கே.குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .

பட்டுக்கோட்டை சரக்கு முனையம் அருகில் வளர்ந்திருந்த கருவேலங்காடுகளை அழித்து கொடுத்த பட்டுக்கோட்டை நகராட்சிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

லயன்ஸ் கிளப் மற்றும் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் சரக்கு முனைய சாலையில் நிழல் தரும் மரங்களை நட்டு வளர்க்க முடிவு செய்யப்பட்டது 

முடிவில் பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் செயலாளர் வ விவேகானந்தம் நன்றி கூறினார்







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments