புதுக்கோட்டையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடக்கம்
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் 40 ஆண்டுகள் பழமையானது. இந்த நிலையில பஸ் நிலையத்தில் கட்டிடங்கள் பல இடங்களில் சேதமடைந்து நிலையில் கான்கிரீட் சிமெண்டு பூச்சு பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் மேற்கூரையில் இருந்து அவ்வப்போது சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் பயணிகள் சிலர் காயமடைந்தனர். இந்தநிலையில் புதிய பஸ் நிலையத்தில் சீரமைப்பு பணிகளை நகராட்சி நிர்வகத்தினர் தற்காலிகமாக மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் தற்காலிகமாக பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி அருகே உள்ள எழில்நகர், ஆலங்குளம் சந்திப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வெங்கலப்பிடாரி அம்மன் கோவிலுக்கு பின்புறம் ஆலங்குளம் பகுதியில் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. இதில் நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், துணைத் தலைவர் லியாகத் அலி, ஆணையர் ஷியாமளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments