புதுக்கோட்டை உள்பட 5 மாவட்டங்களில் ரூ.71½ கோடியில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீன்வளத்துறை புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
மீன்பிடி இறங்குதளம்
தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனையில் 30 கோடி ரூபாய், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபவாசத்திரம் மீனவ கிராமத்தில் ரூ.10 கோடி செலவிலும் மீன்பிடி இறங்கு தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டம் கீழத்தோட்டம் கிராமத்தில் ரூ.8 கோடி செலவிலும், புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கிராமத்தில் 3 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவிலும், புதுக்குடி கிராமத்தில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவிலும் புதிய மீன்பிடி இறங்கு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மரபணு ரீதியாக திலேப்பியா மீன் விதை பண்ணை மேம்படுத்தப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இதேபோன்று தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியில் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் நிதி உதவியுடன் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 66 தங்கும் அறைகளுடன் சுமார் 220 மாணவ-மாணவிகள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள விடுதி கட்டிடத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ரூ.71½ கோடியில் கட்டிடம்
மொத்தம் ரூ.71 கோடியே 55 லட்சம் மதிப்பிலான மீன்பிடி இறங்குதளம் மற்றும் புதிய கட்டிடங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.