சென்னை தாம்பரம்-செங்கோட்டை ரயிலுக்கு அதிரையில் நிறுத்தம் வேண்டும் – அதிரை ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிராம்பட்டினம் நலவாழ்வு பேரவை!



அதிராம்பட்டினத்திற்கு ரயில் சேவை மீண்டும் கிடைக்க முக்கிய காரணமானவரும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதிரையில் ரயில் சேவைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருபவருமான அஹமது அலி ஜாபர், தன்னுடைய அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை என்ற அமைப்பு மூலமாக நேற்று ஜும்மா தொழுகைக்கு பிறகு அதிரை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்தார்.

தாம்பரம் - செங்கோட்டை (20683/84) ரயில்களுக்கு நம் ஊரில் நிறுத்தம் அறிவிக்கவும், மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை அதிரை வழியாக இயக்கவும், கூடுதல் ரயில் சேவைகளை அதிரை ரயில் நிலையத்திற்கு வழங்கவும் வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிரைக்கு ரயில் சேவை வழங்கக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதில் திமுக நகர செயலாளர் குணசேகரன், அதிமுக நகர செயலாளர் பிச்சை, அதிமுக நகர துணை செயலாளர் அஹமது தமீம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

இறுதியாக பேசிய ரயில் போராளி அஹமது அலி ஜாபர், ஒரு மாதத்திற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார். இதில் நூற்றுக்கணக்கான அதிரை மக்கள் கலந்துகொண்டார்கள். 20க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






News Credit: Adirai Pirai 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments