கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி மீமிசல் ,கோபாலபட்டிணம் கடற்கரை பகுதிக்கு பனை விதை நடும் பணியே தொடங்கி வைக்க புதுக்கோட்டை மாண்புமிகு மாவட்டஆட்சியர் வருகை தர அழைப்பு


கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு கோடி பனை விதைகள் 
நடும் பணி மீமிசல் ,கோபாலபட்டிணம்
கடற்கரை பகுதிக்கு பனை விதை நடும் பணியே   தொடங்கி வைக்க புதுக்கோட்டை மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் வருகை தர அழைப்பு விடுத்துள்ளனர். 

கலைஞர் நூற்றாண்டு விழாவினை  முன்னிட்டு  தமிழகத்தில் உள்ள 14 மாவட்ட 1076 நீளமுள்ள கடற்கரையில் ஒரு கோடி பனை விதை நடும் நெடும் திட்டத்தை  தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம்,  தமிழ்நாடு நாட்டு நலப்பணித் திட்டம், 
கிரீன் நீடசுற்றுச்சூழல் அமைப்பு  மூன்று அமைப்புகளுடன் இணைந்து  புதுக்கோட்டை மாவட்டத்தில்  அமரடக்கி புன்னகை அறக்கட்டளை மற்றும் மணமேல்குடி  சீனியார் அன்பறிவகம்  இணைந்து  நூற்றுக்கு மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள்,  என்.எஸ்.எஸ் மாணவ மாணவிகள் , அரசுத்துறைகளின் ஒத்துழைப்போடு  செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி நட மேற்கொள்கிறது.  

சென்னையில் ஒரு கோடிபனை விதை நடவுப்பணியை ‌தமிழ்நாடு முதலமைச்சர் 
மு.க.ஸ்டாலின்   அவர்கள்‌செப்டம்பர் 24 ம் தேதி காலையில் சென்னையில் தொடங்கிவைக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை  வரை  43 கி.மீ. தூர கடற்கரையில் 4லட்சம் பனைவிதைகள் நடவு செய்யப்பட உள்ளது. 

அதற்கான கையேடு மற்றும்  அரசு கூடுதல் தலைமை செயலரின் கடித நகல் ஆகியவற்றை தமிழ்நாடுபனைவாரிய தலைவர் எர்ணாவூர்  ஏ.நாராயணன், Ex.MLA கீரின் நீடா பசுமை அமைப்பு , தலைவர் திரு.ராஜவேலு வழிகாட்டுதலின்  

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  
மாண்புமிகு திருமதி. ஐ.சா.மெர்சிரம்யா I.A.S..  அவர்களை ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்து புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே. கலைபிரபு வழங்கினார். 

கையேட்டை, பெற்றுக் கொண்டார்  கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறும் ஒரு கோடி பனை விதை நடவுத் திட்டத்திற்கு தேவையான  முழு ஒத்துழைப்பும், வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்......

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments