புதுக்கோட்டையில் ரூ. 2.80 கோடியில் கட்டிய சேமிப்புக் கிடங்கு கட்டடம் திறப்பு




புதுக்கோட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு சேமிப்பு கிடங்கினை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து, திருவப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்றார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டம் வட்டம், திருவப்பூர் ‌‌ சேமிப்புக் கிடங்கு வளாகத்தில், ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கினை  (08.09.2023)
திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, திருவப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி.ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்றார்.
தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம், அறிவியல் முறையில் சிறந்த கட்டுமானத்தை ஏற்படுத்தி வேளாண் பொருட்களின் தரம் மற்றும் அளவினைப்
பாதுகாத்திடும் பொருட்டு விவசாயிகள் மற்றும் விவசாயத்தைச் சார்ந்த வர்த்தக
நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனம் முறையே 50 விழுக்காடு பங்கு கொண்ட இரு பங்குதாரர்கள் ஆவர். தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் 60 இடங்களில் 269 கிடங்குகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனக் கிடங்குகளில், விவசாயிகள், வியாபாரிகளின் விவசாய விளைபொருட்கள், விதைகள், உரங்கள் சேமித்து வைக்கப்பட்டு அதற்கான ரசீது (றுயசநாழரளந சுநஉநipவ) வழங்கப்படுகிறது. 

மேலும், அரசு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களால் சேமிக்கப்படும் பொருட்களையும் இருப்பில் வைத்து செயல்பட்டு வருகிறது. 2021-22 ஆம் ஆண்டிற்கான உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கூடுதலாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட
கிட்டங்கி நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக புதுக்கோட்டை மாவட்டம்ஃவட்டம், திருவப்பூர் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில், ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கினை திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மண்டல மேலாளர் (தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம்)
(திருச்சி) திருமதி.க.தமிழ்ச்செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்
திரு.முருகேசன், சேமிப்பு கிடங்கு மேலாளர் (புதுக்கோட்டை) திரு.ம.பழனியப்பன், வட்டாட்சியர் திருமதி.விஜயலட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments