கோபாலப்பட்டிணம் கடற்கரையில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை & மணமேல்குடி சீனியார் அன்பறிவகம் ஏற்பாட்டில் பனை விதை நடும் நெடும் பணி அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

கோபாலப்பட்டிணம் கடற்கரையில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை & மணமேல்குடி சீனியார் அன்பறிவகம் ஏற்பாட்டில் பனை விதை நடும் நெடும் பணி அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்கள் 

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோபால பட்டினம் கடற்கரையில்  புன்னகை அறக்கட்டளை சார்பாக பனை விதைகள் நடும் விழாவினை சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ .வி .மெய்யநாதன் துவங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலபட்டினம் கடற்கரையில்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான 14 மாவட்டங்கள் 1076 கிலோமீட்டர் தூரத்திற்கு 1கோடி பனைவிதைகள் நடும் நெடும் பணியின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை ஓரங்களில் கட்டுமாவடி முதல் அரசங்கரை வரையிலான 43 கிலோமீட்டர் தூரத்திற்கு புன்னகை அறக்கட்டளை & சீனியார்அன்பறிவகம் முன்னெடுக்கும் பனைவிதைகள் நடும் திருவிழாவில் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ வி. மெய்யநாதன்
, அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி, அறந்தாங்கி ஒன்றிய குழு பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன்  அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் குமார் மற்றும்  RSமங்களம்
திரைபட நடிகர் தேவா
 கலந்து கொண்டு  தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்வில் புன்னகை அறக்கட்டளை   நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் கல்லநேந்தல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும்  பலர் கலந்து கொண்டனர்

புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை ஓரங்களில் பனை விதைகள் நடவு செய்த இடங்கள்:

1.கட்டுமாவடி
2.கிருஷ்ணாஜிப்பட்டினம்
3.கண்டனிவயல்
4.மும்பாலை
5.மணமேல்குடி
6.ஆவுடையார்பட்டினம்
7.அம்மாப்பட்டினம்
8.வன்னிச்சிப்பட்டினம்
9.கோட்டைப்பட்டினம்
10.பாலக்குடி
11.குமரப்பன்வயல் 
12.கோபாலப்பட்டினம்
13.சேமங்கோட்டை
14.முத்துகுடா

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments