திருச்சி- புதுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தில் அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம்
திருச்சி-காரைக்குடி வழித்தடத்தில் அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.

ரெயில்கள் வேகம்

திருச்சி-காரைக்குடி அகல ரெயில்பாதை சமீபத்தில் மின்மயமாக்கம் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வழித்தடத்தில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. புதுக்கோட்டை வழியாக செல்லும் இந்த பாதையில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் அதிகம் இயக்கப்படுகின்றன.

இதில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் 90 முதல் 100 கிலோ மீட்டர் வரை உள்ளது. இந்த நிலையில் திருச்சி-காரைக்குடி வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தை 110 கிலோ மீட்டராக அதிகரிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த வழித்தடத்தில் தண்டவாள பாதைகள் ஆய்வு செய்யப்பட்டன.

சோதனை ஓட்டம்

இந்த நிலையில் திருச்சி-காரைக்குடி வழித்தடத்தில் நேற்று அதிவேகமாக ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருச்சியில் இருந்து காலை 9.50 மணிக்கு ரெயில் புறப்பட்டது. புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு காலை 10.15 மணி அளவில் வந்து பின்னர் காரைக்குடி நோக்கி சென்றது. மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டதாக ரெயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சோதனை ஓட்டத்தையொட்டி அந்த நேரத்தில் இந்த வழித்தடத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தன. ரெயில் கடந்து செல்லும் நேரத்தில் தண்டவாளத்தை பொதுமக்கள் யாரும் கடந்து செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்த சோதனை ஓட்டம் ஒருபுறம் வேகத்தை அதிகரிப்பதற்காக நடத்தப்பட்டு இருந்தாலும், தண்டவாளத்தின் உறுதித்தன்மையையும் ஆய்வு செய்யும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

2 Comments

  1. கொரொனா காலத்தில் அதிமுக ஆட்சியாளர்கள் நிதிநெருக்கடியை காரணம் காட்டி பல ஆண்டுகள் போராடி பெற்ற சரண்விடுப்பு ஒப்படைத்து ஊதியம் பெறுதல்,பணிக்காலத்தில் ஊக்க ஊதிய உயர்வு நிறுத்திவைக்கப்பட்டததிமுக ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் கடந்த்ச் பிறகும் நிதி நெருக்கடி என்று கூறுவது பேரறிஞர்,கலைஞர் வழிவந்த ஆட்சிகு அழகல்ல.எதிர்கட்சியாக இருக்கும் போதும்,ஆளும்கட்சியாக இருக்கும்போதும் திமுக,திமுகதான் மாற்றமில்லை.ஆனால் அப்போது க்கூறியது இப்போது இல்லை.சம வேலை.சம ஊதியம்.மாண்புமிகு முதல்வர் நேரடியாகச்சென்று கேட்கின்ற ஊதியமுரண்பாட்டிணை இடைக்கால நிவாரணமாக வழங்க ஆணையிட்டு உண்ணாவிரதப்போராட்டத்தினை முடித்திவைக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  2. கொரொனா காலத்தில் அதிமுக ஆட்சியாளர்கள் நிதிநெருக்கடியை காரணம் காட்டி பல ஆண்டுகள் போராடி பெற்ற சரண்விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் பெறுதல்,பணிக்காலத்தில் ஊக்க ஊதிய உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது.திமுக ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் கடந்த பிறகும் நிதி நெருக்கடி என்று கூறுவது பேரறிஞர்,கலைஞர் வழிவந்த ஆட்சிக்கு அழகல்ல.எதிர்கட்சியாக இருக்கும் போதும்,ஆளும்கட்சியாக இருக்கும்போதும் திமுக,திமுகதான் மாற்றமில்லை.ஆனால் அப்போது கூறியது இப்போது இல்லை.சம வேலை.சம ஊதியம்.மாண்புமிகு முதல்வர் நேரடியாகச்சென்று கேட்கின்ற ஊதியமுரண்பாட்டிணை இடைக்கால நிவாரணமாக வழங்க ஆணையிட்டு உண்ணாவிரதப்போராட்டத்தினை முடித்திவைக்க அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.