பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் NSS மாணவர்கள் தூய்மை பணி
பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் NSS மாணவர்கள் தூய்மை பணி நடைபெற்றது 

பட்டுக்கோட்டை அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் இன்று 03. 10. 2023 செவ்வாய்க்கிழமை காலை பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர்  சதெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார்.

 நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் என் வீரமணி அனைவரையும் வரவேற்றார். முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 30 பேரும் தேசிய மாணவர் படை மாணவர்கள் 50 பேரும் கலந்து கொண்டனர்.

 முகாமில் முதலாவதாக பட்டுக்கோட்டை ரயில் நிலைய வளாகம் நடைமேடை, ரயில் பாதைகள் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள புதர்களை அழித்தார்கள். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தினார்கள்.

 பட்டுக்கோட்டை ரயில் நிலைய தலைமை அதிகாரி கே மருத பாண்டியன் இந்தியன் ரயில்வேயில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள் பற்றியும் இரயில்கள் இயங்கும் முறைமைகள் சிக்னல் பற்றியும் விளக்கம் அளித்தார்

பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன் ரயில்வே துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும் தேர்வுக்கு தயாராகும் முறை பற்றியும்,
பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் செயலாளர் வவிவேகானந்தம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும் இரயில் நிலையங்களை தூய்மையாக பராமரிப்பது பற்றியும் திருவாரூர் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி இளையராஜா ரயில்வே பாதுகாப்பு பற்றியும்   மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர் 

 பின்னர் மாணவர்கள் தூய்மை இந்தியா விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

 நிகழ்ச்சியின் முடிவில் தேசிய மாணவர் படை திட்ட அதிகாரி வி மாரிமுத்து நன்றி கூறினார்


News Credit : Pattukottai Rail Association 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments