விவசாயிகள் பயிா்க்கடன் பெற விண்ணப்பிக்கலாம் வேளாண் அதிகாரி தகவல்




விவசாயிகள் பயிர்க் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் அதிகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர்க்கடன் பெற...

இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையால் பயிர்க்கடன் சிறப்பு முகாம் நாடு முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை உழவர் கடன் அட்டை பெறாத விவசாயிகள் இம்முகாம்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம். உழவர் அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளிடம் 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். மேலும், இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முறையாக தவணை மாறாமல் திரும்ப செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம். உழவர் கடன் அட்டைத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் வரை எவ்விதப் பிணையமும் இன்றிக் கடன் வழங்கப்படும்.

பதிவிறக்கம்

விண்ணப்பதாரரின் கடன் மனுக்கள் தகுதியின் அடிப்படையிலும், PMFBY வலைத்தளத்திலுள்ள விவசாயிகளின் விவரம், வங்கிகளின் சட்ட திட்டங்கள் ஆகியவற்றிற்கு உட்பட்டும், நிலம், பயிரீட்டு அளவு ஆகியவற்றை பொறுத்தும் கடன் வழங்கப்படும்.

கடன் பெறுவதற்கான விண்ணப்பம் KCC வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து, விவசாயிகளின் பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பத்தினை அதன் இணை ஆவணங்களுடன், நேரடியாக வங்கிக் கிளைகளில் சம்பந்தப்பட்ட வங்கி வணிக தொழிலாளர்கள் மூலமாகவோ, மாவட்ட வேளாண்மை துறை அலுவலகம், தோட்டக்கலைத்துறை அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இவற்றில் ஏதேனும் ஒன்றிலோ சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments