மணமேல்குடி ஒன்றியத்தில் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் பயிற்சியினை அறந்தாங்கி தொடக்கநிலை மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் பார்வை




மணமேல்குடி ஒன்றியத்தில்  ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு நடைபெற்ற எண்ணும் எழுத்தும் கணிதப் பயிற்சியினை  தொடக்கநிலை மாவட்ட கல்வி அலுவலர் மதிப்புக்குரிய  திரு சண்முகம் அவர்கள் பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு எண்ணம் எழுத்தும் பயிற்சியின் அணுகுமுறைகள் குறித்த விளக்கங்களை எடுத்துரைத்தார்கள்.  மேலும் மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றவாறு வெவ்வேறு கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் கொடுக்கலாம் என ஆலோசனை வழங்கினார்கள். 

மேலும் இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கு தமிழ் ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் கையேடுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய 
திரு செழியன் அவர்கள் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் பெலோஷிப்  திரு கோபிநாத் அவர்கள்  ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேல்சாமி அங்கையற்கண்ணி ஆகியோர் கலந்து கொண்டனர்









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments