புதுக்கோட்டையில் மாரத்தான் ஓட்டத்திற்கு இணையான அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்பந்தயம் நாளை அக்டோபர் 07 நடக்கிறது இன்று அக்டோபர் 06 முன்பதிவுக்கு கடைசிநாள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தகவல்
புதுக்கோட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அறிஞா் அண்ணா நெடுந்தொலைவு ஓட்டம் சனிக்கிழமை (அக். 7) காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

17 முதல் 25 வயதுக்குள்பட்ட ஆண்களுக்கான நெடுந்தொலைவு ஓட்டம் 8 கி.மீ. தொலைவுக்கு மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கி, மாலையீடு வழியாக சிவபுரத்தில் திரும்பி மீண்டும் விளையாட்டரங்கில் முடிவடையும். 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான நெடுந்தொலைவு ஓட்டம் 10 கி.மீ. தொலைவுக்கு மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கி, மாலையீடு வழியாக சிவபுரம், நெய்வாசல்பட்டி விலக்கில் திரும்பி மீண்டும் விளையாட்டரங்கில் முடிவடையும். 17 முதல் 25 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான நெடுந்தொலைவு ஓட்டம் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்டோருக்கான 5 கி.மீ. நெடுந்தொலைவு ஓட்டம் மாவட்ட விளையாட்டரங்கில் தொடங்கி, மாலையீடு வழியாக நெய்வாசல்பட்டி விலக்கு வரை நடைபெறும்.

இதில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம் (4 பேருக்கு), இரண்டாம் பரிசாக ரூ. 3 ஆயிரம் (4 பேருக்கு), 3ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரம் (4 பேருக்கு), 4ஆம் பரிசாக ரூ. ஆயிரம் (28 பேருக்கு) ரொக்கப் பரிசுகளாக, சான்றிதழ்களுடன் வழங்கப்படும்.

இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் தங்களின் வயதுச் சான்று, கல்விச் சான்று, ஆதாா் அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன் வெள்ளிக்கிழமை(அக்.6) மாலை 5 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கில் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இத்தகவலை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா தெரிவித்தாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments