கன்னியாகுமரி - ஹஜ்ரத் நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் திருக்குறள் SF எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்




இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியிலிருந்து நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு திருக்குறள் விரைவு ரயில் (TIRUKKURAL EXP 12641) இயக்கப்படுகிறது. 47 மணி நேரம் 25 நிமிடங்கள் பயணித்து இந்த ரயில் இலக்கை அடைகிறது.



முதல் நாள் இரவு 7.10 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்படும் ரயில் மறுநாள் காலை 8.25 மணிக்கு சென்னை எக்மோர் சென்று சேரும். 8.45 மணிக்கு மீண்டும் கிளம்பி மறுநாள் மாலை 6.35 மணிக்கு டெல்லி நிஜாமுதீன் சென்றடையும்.

23 முக்கிய நிலையங்களை கடந்து செல்லும் இந்த ரயிலில் பராமரிப்பு பணி காரணமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அக்டோபர் 4 மற்றும் 6ஆம் தேதிகளில் இரவு 7.10 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் திருக்குறள் அதிவிரைவு ரயில் மதுரை, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், அரக்கோணம், ரேணிகுண்டா, கச்சிகுடா, காசிப்பேட்டை வழியாக திருப்பிட விடப்பட உள்ளது. அந்த சமயம் இந்த ரயில் விஜயவாடா செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல, ஹஸ்ரத் நிஜாமுதீனில் இருந்து கன்னியாகுமரிக்கு அக்டோபர் 2 மற்றும் 9ஆம் தேதிகளில் காலை 5.20 மணிக்கு புறப்படும் ரயில், பல்ஹர்ஷா, காசிப்பேட்டை, கச்சிகுடா, ரேணிகுண்டா, அரக்கோணம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை வழியாக திருப்பி விடப்படுகிறது.

விஜயவாடா கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணி காரணமாக ரயில் திருப்பிவிடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments