கோபாலப்பட்டிணம் - மீமிசல் சாலைய இணைக்கும் தோப்பு சாலை & மில் சாலை பகுதியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் - வாகன ஓட்டிகள் கோரிக்கை



கோபாலப்பட்டிணம் - மீமிசல் சாலைய இணைக்கும்  தோப்பு சாலை & மில் சாலை பகுதியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற  வேண்டும் - வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதுக்கோட்டை  மாவட்ட ஆவுடையார் கோவில் தாலுகா  கோபாலப்பட்டிணம் - மீமிசல் இணைக்கும் முக்கிய சாலையாக தோப்பு சாலை & மில் சாலை உள்ளது. இந்த வழியாக தினசரி  இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்கின்றனா்.  

இந்நிலையில், இந்த பகுதிகளில், சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் புதா் போல் மண்டி கிடக்கின்றன.  

இந்த கருவேல மரங்கள் படா்ந்து சாலையில் விழுந்து கிடக்கின்றன. இதனால் இந்தச் சாலையில் எதிரே  வாகனங்கள் வரும்போது இரு சக்கர வாகனத்தில் செல்வோா் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மேலும், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் சாலையை மறைத்தும் காணப்படுகிறது. 

இதன் காரணமாக  விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் 

மேலும், சாலையில் செல்வோரின் முகம், கண்களை கருவேல மரங்கள் குத்தும் சூழ்நிலை உருவாகும்

வாகனஓட்டிகளின் நலன் கருதி, நாடடானி புரசக்குடி & மீமிசல்  ஊராட்சி நிர்வாகம் சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் & பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments