கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு, வரும் 14ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற்று பயன்பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை கடந்த மாதம் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதற்கிடையில், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் ரூ.1,000 வங்கி கணக்கிற்கு வராத குடும்பத் தலைவிகள், இ-சேவை மையங்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையங்களில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வரும் 14ம் தேதியே அவர்களுடைய வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
15-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஒருநாள் முன்கூட்டியே பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.