அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு நீலவேம்பு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா , அமரடக்கி ஊராட்சி, அமரடக்கி அரசு உயர்நிலைப்பள்ளி   அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் வழிகாட்டுதலின் படி தலைமை ஆசிரியர்  திரு. பா சுந்தரபாண்டியன்  அவர்கள் தலைமையில்  புன்னகை அறக்கட்டளை நிறுவனர்  ஆ.சே. கலைபிரபு   அவர்கள் முன்னிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  கபசுர குடிநீர் வழங்கப்பட்டது 
பின்பு  ஆ.சே.கலைபிரபு  அவர்கள் மாணவர்களுக்கு .  கூறிய அறிவுரைகள்  பருவமழை தொடக்கத்தை கருத்தில் கொண்டு  காய்ச்சல், அதிகமாக பரவி கொண்டு வருகிறது  ஆகையால் பள்ளி மாணவர்கள்  தங்கள் .கை, கால்களை சுத்தமாக கழுவிவிட்டு , பிறகு உணவு அருந்த வேண்டும். குடிநீர் தண்ணீர் காய்ச்சி அருந்த வேண்டும் என்று  மாணவர்களுக்கு .அறிவுரை வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் பள்ளிதலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments