தொண்டியில் சாலைகளில் சுற்றிய கால்நடைகள் பிடிபட்டன அபராதம் செலுத்தாவிட்டால் ஏலம்; பேரூராட்சி தலைவர் அறிவிப்பு




தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பிரதான சாலைகள், முக்கிய வீதிகள், பஸ் நிலையம், மருத்துவமனை வளாகம், அரசு அலுவலக வளாகங்கள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய பகுதிகளில் இடையூறாக கால்நடைகள் சுற்றி திரிகின்றன. பொதுமக்களின் நடமாட்டத்திற்கும், போக்குவரத்திற்கும் பெரும் இடையூறாக அவை சுற்றி திரிவதால் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களின் கால்நடைகளை தங்களது சொந்த பராமரிப்பில் வைத்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மீட்கப்படாத கால்நடைகளை பொது ஏலம் விடப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் சாலைகளில் சுற்றித்திரிந்த கால்நடைகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அபராதம் செலுத்தி மீட்கப்படாத மாடுகள் நாளை (வெள்ளிக்கிழமை) பொது ஏலம் விடப்படும் என பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான், செயல் அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments