நாகை - காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் மற்றும் துறைமுகங்கள், கப்பல் நீா்வழிப் போக்குவரத்து துறை அமைச்சா் ஆகியோா் சனிக்கிழமை (அக்.14) கொடியசைத்து தொடக்கிவைக்கின்றனா்.
நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அக்.10 ஆம் தேதி தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த நிகழ்வு இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குகிறது. மத்திய அமைச்சா்கள் ஜெயசங்கா் (வெளியுறவுத் துறை), சா்வானந்த சோனாவால் (கப்பல் நீா்வழிப் போக்குவரத்து) ஆகியோா் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து கப்பல் போக்குவரத்தை தொடங்கிவைக்கின்றனா்.
முன்னதாக, பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக வாழ்த்து செய்தி கூறவுள்ளாா். கப்பல் போக்குவரத்து தொடக்க விழாவில் நேரடியாக பங்கேற்கும் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு சிறப்புரையாற்றவுள்ளாா்.
முதல் நாள் மட்டும் கட்டண சலுகை:
நாகை - காங்கேசன்துறை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்க தினமான சனிக்கிழமை (அக். 14) மட்டும் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு முறை கட்டணமாக ரூ. 2,800 மட்டும் (வரிகள் உள்பட) வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் எவ்வளவு? முன்பதிவு செய்வது எப்படி?
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேயன் துறைமுகத்திற்கு வரும் அக்டோபர் 14ஆம் தேதியில் முதல் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுகிறது.
இதற்காக 3 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்திருந்தது. இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் வந்து நிற்க வசதியாக துறைமுகத்தின் கரை பகுதி ஆழப்படுத்தப்பட்டது, மேலும் நாகப்பட்டினம் துறைமுகம் நவீனமாக்கப்பட்டது.
கப்பலில் இலங்கை செல்ல கட்டணம் எவ்வளவு?
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் கடல் வழியாக 60 நாட்டிகல் மைல் தூரம் உள்ளது. இதனை பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் கடக்கிறது.
தினசரி நாகப்பட்டினத்திலிருந்து காலை 7:00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:30-12:00 மணிக்கு இலங்கை சென்றடையும். அதேபோல், பிற்பகல் 1:30 மணிக்கு இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் புறப்படும் கப்பல் இரவு 5:30 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடையும்.
ஒரு பயணி 50 கிலோ எடை கொண்ட சுங்கத்துறை அனுமதி வழங்கியப் பொருட்களை எடுத்துச் செல்லலாம்.
இந்த கப்பலில் பயணிக்க 6500 ரூபாய் மற்றும் 18% ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 7670 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கப்பலில் இலங்கை செல்ல பாஸ்போர்ட், விசா தேவையா?
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், சுற்றுலா விசா பெற்றுக் கொண்டுதான் செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமான நிலையத்தின் நடைமுறைகளே நாகப்பட்டினம் துறைமுகத்திலும் பின்பற்றப்படும் என்கிறார் துறைமுக அதிகாரி.
இது குறித்து பேசிய நாகப்பட்டினம் துறைமுக அதிகாரி ஒருவர் கூறும்போது, "நாகப்பட்டினம் துறைமுகம் கடந்த 2 மாதத்தில் கப்பல் போக்குவரத்திற்காக பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு தற்போது ஒரு மினி விமான நிலையம் போல மாறி இருக்கிறது." என்றார்.
"இனி நாகப்பட்டினம் துறைமுகத்திற்குள் கப்பலில் பயணிக்கும் பயணிகள் நேரடியாக வந்து கப்பலில் ஏறிவிட முடியாது. விமான நிலையம் போன்று பல கட்ட சோதனைகள் பின்பே கப்பலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். குறிப்பாக, துறைமுகத்தில் இருந்து கப்பல் காலை 7:00 மணிக்கு புறப்படுகிறது என்றால் அதிகாலை 4:30 முதல் 5:00 மணிக்குள்ளாகவே துறைமுகத்திற்குள் பயணிகள் வந்து விட வேண்டும்." என்றார்.
"துறைமுகத்திற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை பாதுகாப்புச் சோதனைகள் செய்வர். அதனைத் தொடர்ந்து டிக்கெட், விசா பரிசோதனை நடத்தப்படும்", என்றார் அவர்.
கப்பல் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்குச் செல்வதற்கு ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து ரூ.7670 டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதனை www.kpvs.in. என்ற இணையதளத்திற்குச் சென்று பயணத் தேதி, பாஸ்போர்ட் நகல், விசாவின் நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பணத்தை ஆன் லைனில் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
இலங்கையின் இணையத்தளம் அல்லது அருகில் உள்ள சுற்றுலா நிறுவனங்களை அணுகி கப்பல் பயணத்திற்கான சுற்றுலா விசா ஒரே நாளில் பெற்றுவிடலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.