திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதைகளில் சரக்கு தொடர்வண்டிகள் மூலம் ரயில்வேக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு ? RTI கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் பதில்




திருச்சி இரயில்வே கோட்டத்திற்கு திருவாரூர்-காரைக்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இரயில் பாதைகளில் சரக்கு தொடர்வண்டிகள் மூலம் இரயில்வே வாரியத்திற்கு இதுவரை எவ்வளவு வருமானம் கிடைத்துள்ளது வாங்க பார்க்கலாம் 

திருவாரூர் சரக்கு இரயில் முனையத்தில்,

(ஏப்ரல் 2022 - மார்ச் 2023) வரையிலான நிதியாண்டில் 15 கோடியே 4 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

(ஏப்ரல் 2023  - ஆக்ஸ்ட் 2023) வரையிலான காலத்தில் 4 கோடியே 84 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

பட்டுக்கோட்டை சரக்கு இரயில் முனையத்தில்,

(ஏப்ரல் 2022 - மார்ச் 2023) வரையிலான நிதியாண்டில் 2 கோடியே 43 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.

(ஏப்ரல் 2023  - ஆக்ஸ்ட் 2023) வரையிலான காலத்தில் 84 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி 

திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி பாதையிடையே சரக்கு ரயில் போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை ரயில் ஆர்வலர் சூர்யா பிரகாஷ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments