நாகப்பட்டினம் - காங்கேசன் துறை கப்பல்: பயண நாட்கள் மாற்றியமைப்பு




நாகப்பட்டினம் - காங்கேசன் துறை இடையே இயக்கப்படும் பயணியர் கப்பல், திங்கள், புதன், வெள்ளி என, மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறை துறைமுகத்திற்கு பயணியர் கப்பல் போக்குவரத்தை, இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் துவக்கி உள்ளது. இந்தக் கப்பலுக்கு, 'செரியாபாணி' என, பெயரிப்பட்டு உள்ளது. ஒரு முறை பயணிக்க, 7,600 ரூபாய் கட்டணம்.


முதல் கப்பல் போக்குவரத்து நேற்று முன்தினம் முறைப்படி துவங்கியது. முதல் நாளில், 50 பயணியர், நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன் துறை துறைமுகம் சென்றனர்.

வடகிழக்கு பருவமழை துவங்கும் வரை கப்பல் போக்குவரத்தை தொடர்ச்சியாக இயக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், நேற்று கப்பலில் பயணிக்க, ஏழு பேர் மட்டுமே முன்பதிவு செய்திருந்ததால், போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இனி, திங்கள், புதன், வெள்ளி என, மூன்று நாட்கள் மட்டுமே கப்பல் இயக்கப்படும் என, இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பயண கட்டணத்தை குறைக்கும்படி, தமிழக அரசு வாயிலாக வலியுறுத்தப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments