புதுக்கோட்டை அருகே முயல் வேட்டையாடிய 3 பேர் கைது
புதுக்கோட்டை அருகே முயல் வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

வனப்பகுதியில் சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கீரனூர், பொன்னமராவதி, திருமயம், அறந்தாங்கி ஆகிய வனச்சரகங்களில் மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தலைமையில் வனச்சரக அலுவலர் சதாசிவம், பெருங்களூர் பிரிவு வனவர் முருகானந்தம், ஆலங்குடி பிரிவு வனவர் ரவிச்சந்திரன், புதுக்கோட்டை பிரிவு வனவர் மகேந்திரன், வனக்காப்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை அதிரடி சோதனை நடத்தினர்.


இதில் புதுக்கோட்டை வனச்சரகத்தில் வராப்பூர் கிராமத்திற்கு அருகில் தரைக்காடுகளில் வாழும் முயல்களை வேட்டையாடியவர்கள் சிக்கினர். இதில் அதே கிராமத்தை சேர்ந்த அருண், வீரபாண்டியன், உருமைய்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


முயல்கள் பறிமுதல்

கைதானவர்களிடம் இருந்து உயிருடன் ஒரு முயலும், இறந்த நிலையில் ஒரு முயலும், வேட்டைக்கு பயன்படுத்திய டார்ச் லைட், ஒலி அதிர்வு எந்திரம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் வன உயிரினங்களை வேட்டையாடினால், தொந்தரவு செய்தால், வீட்டில் வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments