மணமேல்குடி ஒன்றியத்தில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பாடவாரியாக ஆசிரியர்கள் பணித் திறன் மேம்பாட்டு ஒரு நாள் பயிற்சி




மணமேல்குடி ஒன்றியத்தில்  6 முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு பாடவாரியாக ஆசிரியர்கள் பணித் திறன் மேம்பாட்டு  ஒரு நாள் பயிற்சி தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி  மணமேல்குடி ஒன்றியதிற்கு உட்பட்ட   மணமேல்குடி  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6  முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு   பயிற்சியினை  மணமேல்குடி , வட்டார கல்வி அலுவலர்  மதிப்புக்குரிய  திரு செழியன் அவர்களின் தலைமையில் தொடங்கியது.

மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி இந்திராணி மற்றும் மணமேல்குடி வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்

இப்பயிற்சியில் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்திற்கு வினாக்கள் தயாரிப்பு,  சிறுவர் இதழ் தயாரிப்பு மற்றும் வாசிப்பு இயக்கம் தொடர்பான கருத்துக்களை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

இப்பயிற்ச்சியில் கருத்தாளர்களாக  தமிழ் பாடத்திற்கு ஆசிரியர் 
பழனி ஆண்டவர் விஸ்வநாதன் , ஆங்கிலப் பாடத்திற்கு ஆசிரியர்கள் சாமிநாதன் ஜெயபாலன்   ஆகியோர் செயல்பட்டனர்.

இப் பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்  முத்துராமன் வேல்சாமி மற்றும் ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர்











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments