ராமநாதபுரம் பஸ் நிலைய கட்டிடங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து பொதுமக்களின் நலன் கருதி ரூ.20 கோடி மதிப்பில் புதிய நவீன பஸ் நிலையம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டன.
சுமார் 4.17 ஏக்கர் பரப்பில் பல்வேறு வசதிகளுடன் பயணிகள் ஓய்வறை, 92 கடைகள், நவீன கழிப்பிட வசதி, ஒரே நேரத்தில் 35 பஸ்கள் நிறுத்தும் இடம் ஒதுக்கப்பட்டு பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து பணியின் தன்மை, தரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி ஆய்வு மேற்கொண்டார். அப்போது வரைபடத்தின் அடிப்படையில் பஸ் நிலையம் கட்டுமான பணி தொடர்பாக நகராட்சி ஆணையர் அஜீதா பர்வீன் முன்னிலையில் பொறியாளர் ரங்கராஜிடம் விவரம் கேட்டறிந்தார்.
இதன் பின்னர் கட்டுமான பொருட்களான கம்பியின் உறுதித்தன்மை, சிமெண்ட் மற்றும் ஜல்லிக்கற்களின் தரத்தை பார்வையிட்டார். இதுகுறித்து கே.நவாஸ் கனி எம்.பி. கூறியதாவது:-
ராமநாதபுரம் பஸ் நிலைய கட்டுமானப்பணியை திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன் முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமும் வலியுறுத்தப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி, நகராட்சி கவுன்சிலர்கள் ராஜாராம் பாண்டியன், காதர் பிச்சை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான், திருப்புல்லாணி கிழக்கு வட்டார தலைவர் சேது பாண்டியன், நகர் தலைவர் கோபி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி வக்கீல் முருக பூபதி, மாவட்ட குழு உறுப்பினர் கலையரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.