திருத்துறைப்பூண்டி- முத்துப்பேட்டை - அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை - பேராவூரணி - அறந்தாங்கி காரைக்குடி இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் 121 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது
திருத்துறைப்பூண்டி- காரைக்குடி இடையே அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் 121 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.

மின்மயமாக்கும் பணி

திருவாரூர்- காரைக்குடி இடையே மீட்டர்கேஜ் பாதை அகல ெரயில் பாதையாக மாற்றப்பட்டு ெரயில் இயக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து நாகை மாவட்டம் அகஸ்தியம்பள்ளி இடையே 36 கிலோமீட்டர் தூரம் ரெயில் தடத்தை மின் மயமாக்குவதற்காக மத்திய அரசு ரூ.47 கோடி ஒதுக்கி உள்ளது.

இந்தபணியை ஒரு வருடத்துக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது. இதற்காக அகஸ்தியம்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரையிலும், பின்னர் திருத்துறைப்பூண்டியில் இருந்து காரைக்குடி வரை அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சோதனை ஓட்டம்

இந்தநிலையில் ரெயிலின் வேகத்தை அதிக படுத்தி நேரத்தை குறைக்கும் வகையில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டியில் இருந்து அதிவிரைவு ரெயில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இதில் 31 நிமிடத்தில் அந்த ரெயில் அகஸ்தியன்பள்ளி ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.

பின்னர் அகஸ்தியம்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வந்த அதிவேக ரெயில் பின்னர் என்ஜின் மாற்றப்பட்டு, திருத்துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக காரைக்குடி வரை அதிவேக சோதனை ஓட்டமாக 121 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.

அதிர்வுகள்

இந்த அதிவேக ரெயில் சோதனை ஓ.எம்.எஸ் என்ற கருவி மூலம் அளக்கப்பட்டு எங்கெல்லாம் அதிர்வு அதிகமாக உள்ளது என்பதை அறிந்து தடம் சீரமைக்கப்பட்டு பயணிகள் வசதியாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதன்படி மின் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் துரிதப்படுத்தும். இதன் முன்னோட்ட நடவடிக்கையாக அதிவேக பரிசோதனை ரயில் இயக்கப்பட்டது. ரெயில் சோதனை ஓட்டத்தின் போது ெரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் பெத்துராஜ், ெரயில்வே கட்டுமான பிரிவு உதவி செயற்பொறியாளர் டேனியல் ஜெயக்குமார், அரசு வக்கீல் பாஸ்கர், திருவாரூர் மாவட்ட ெரயில் உபயோகிப்பாளர் சங்க தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஒருங்கிணைப்பாளர் துரை ராயப்பன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ெரயில்வே வழித்தடத்திலும், திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை- அறந்தாங்கி-காரைக்குடி வழித்தடத்திலும் நேற்று மதியம் 1.30 மணிக்கு இருப்புபாதை உறுதித்தன்மை மற்றும் தண்டவாள அதிர்வுகளை ஆய்வு செய்திடும் வகையில், அதிவேக ரயில் 121 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் அறந்தாங்கி வழித்தடத்தில் சென்ற போது இங்குள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இருப்புபாதையை கடப்பதையோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதையோ, இருசக்கர வாகனங்கள் கடப்பதையோ தவிர்த்தனர். இந்த வழித்தடத்தில் அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் எவ்வித தடைகளுமின்றி கண்ணிமைக்கும் நேரத்தில் அறந்தாங்கி ரெயில் நிலையத்தை கடந்து காரைக்குடி நோக்கி விரைவாக சென்றது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments