புதுக்கோட்டை வழியாக சென்னை சென்ட்ரல் - காரைக்குடி இடையே ஆயுத பூஜை சிறப்பு இரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதுக்கோட்டை வழியாக சென்னை சென்ட்ரல் - காரைக்குடி இடையே ஆயுத பூஜை சிறப்பு இரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது ‌‌.

இதுகுறித்து தெற்கு ரயில்வே  வெளியிட்ட செய்தி:

வண்டி எண் : 06039 சென்னை சென்ட்ரல் - காரைக்குடி 

வண்டி எண் : 06039 சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 22ஆம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை காலை 09.30 மணிக்கு காரைக்குடி சென்றடையும். 

வண்டி எண் : 06040 காரைக்குடி ‌- சென்னை சென்ட்ரல் 

மறுமாா்கத்தில் வண்டி எண் : 06040 காரைக்குடியில் இருந்து அக்டோபர் 23-ஆம் திங்கட்கிழமை இரவு 09.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்

எங்கே எங்கே நின்று செல்லும் ?

சென்னை எழும்பூர்,
தாம்பரம்,
செங்கல்பட்டு சந்திப்பு, 
விழுப்புரம் சந்திப்பு, 
கடலூர் துறைமுகம் சந்திப்பு,
சிதம்பரம்,
சீர்காழி,
மயிலாடுதுறை சந்திப்பு ,
கும்பகோணம்,
பாபநாசம்,
தஞ்சாவூர் சந்திப்பு ,
பூதலூர்,
திருவெறும்பூர் ,
திருச்சி சந்திப்பு,
புதுக்கோட்டை 

ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

முன்பதிவு 

இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது 

செய்தி சுருக்கம்

வரும் 22/10/23 ஞாயிறு அன்று 06039/சென்னை சென்ட்ரல் - காரைக்குடி சிறப்பு இரயில்!

சென்னை சென்ட்ரல் - 11:30 pm இரவு
சென்னை எழும்பூர் - 12:10 am நள்ளிரவு
சென்னை தாம்பரம் - 12:40 am நள்ளிரவு
புதுக்கோட்டை - 08:08 am காலை வரும் 

வரும் 23/10/23 திங்கள் அன்று  06040/காரைக்குடி - சென்னை சென்ட்ரல் சிறப்பு இரயில்

புதுக்கோட்டை - 10:10 pm இரவு 
சென்னை தாம்பரம் - 07:18 am காலை
சென்னை எழும்பூர் - 07:50 am
சென்னை சென்ட்ரல்- 09:00 am செல்லும்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments