மணமேல்குடி ஒன்றியத்தில் மூன்றாம் நாள் நடைபெற்ற கலைத் திருவிழாவில்அறந்தாங்கி இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் தொடங்கி வைத்த நிகழ்வு
புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிறைவு நாள் கலை திருவிழாவில் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திருமதி ராஜேஸ்வரி அம்மா அவர்கள்  கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள்.

 இந்நிகழ்வில் கலைக்குழு உறுப்பினர்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் அவர்கள் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு இளங்கோவன் அவர்கள் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் திரு.செழியன் அவர்கள் மற்றும் திருமதி இந்திராணி அவர்கள்
 அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளித் துணை திரு.இளையராஜா ஆய்வாளர் மணமேல்குடி வட்டார  வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள், கலைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இன்று ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நடைபெறுகின்ற  குழு நடனம் மற்றும் தனி நடனம் நாடகம் வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments