கோபாலப்பட்டிணத்தில் புதிதாக சாலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு மூன்று மாத்திற்கு மேலாக காத்திருக்கும் குண்டும், குழியுமான சாலைகள்! பணிகளை துவங்க பொதுமக்கள் கோரிக்கை!!



கோபாலப்பட்டிணத்தில் புதிய சாலைகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு மூன்று மதத்திற்கு மேலாகியும் பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பணியை விரைந்து துவங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் மீமிசல்-கோபாலப்பட்டிணத்தை இணைக்கும் முக்கிய சாலையாக காவல் நிலையம் செல்லும் சாலை மற்றும் ஸ்டேட் பேங்க் சாலை இருந்து வருகிறது.



இந்நிலையில் இந்த சாலையானது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக இருந்து வந்த நிலையில் கடந்த 06.07.2023 அன்று முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.70 லட்ச மதிப்பீட்டில் இரண்டு சாலைகளும் புதிதாக தார் சாலை அமைப்பதற்காக அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
 
இந்நிலையில் அடிக்கல் நாட்டி மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை எந்த ஒரு வேலைகளும் ஆரம்பிக்காமல் கிடப்பில்  போடப்பட்டுள்ளது.

எனவே வருகின்ற காலம் மழைக்காலமாக இருப்பதால் உடனடியாக சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments