ஆவுடையார்கோவிலில் உயர்கோபுர மின்விளக்கு அமைப்பு அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்
ஆவுடையார்கோவில் கடைவீதியில் தெற்குவீதி, கீழவீதி சந்திப்பில் ராமநாதபுரம் எம்.பி. தொகுதி நிதியில் ரூ.4 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நவாஸ்கனி எம்.பி. முன்னிலை வகித்தார். அமைச்சர் ரகுபதி தலைமை தாங்கி உயர்ேகாபுர மின்விளக்கை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஆவுடையார்கோவில் (வடக்கு) உதயம்சண்முகம், (தெற்கு) பொன்துரை, ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி, ஒன்றியக்குழு உறுப்பினர் கருப்பூர் செந்தில்குமரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தமிழ்ச்செல்வன் மற்றும் தி.மு.க.வினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments