வேளாண் காடுகள் திட்டத்தில் இலவச மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு அழைப்பு
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் ‘வேளாண் காடுகள்’ திட்டத்தின்கீழ் இலவச மரக்கன்றுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மா. பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானமும் வேலைவாய்ப்பும் கிடைக்கச் செய்வதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழலை உருவாக்கி மண்வளத்தை மேம்படுத்தவும் ‘வேளாண் காடுகள்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன் தரும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, விவசாய நிலங்களின் வரப்புகளிலும் மற்றும் விவசாய நிலங்களுக்குள்ளும் நடவு செய்யப்படும். இதற்கான மரக்கன்றுகள் வனத் துறையின் 7 நாற்றங்கால்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு, 100 சதவிகித மானிய விலையில் வழங்கப்படும்.

விவசாயிகள் மரக்கன்றுகளைப் பெறுவதற்காக அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி, தங்களின் விவரங்களை உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். வேளாண்மை விரிவாக்க மையத்தின் பரிந்துரையின்படி மரக்கன்றுகளை அருகிலுள்ள வனத்துறை நாற்றங்கால் பண்ணையில் நேரில் சென்று இலவசமாகப் பெற்று, நடவு செய்து பயன்பெறலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments