மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் தகுதியுள்ள யாரும் நிராகரிக்கப்பட மாட்டாா்கள் என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.




மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தில் தகுதியுள்ள யாரும் நிராகரிக்கப்பட மாட்டாா்கள் என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை அருகே நத்தம்பண்ணை ஊராட்சி அபிராமி நகரில் பகுதிநேர நியாயவிலைக் கடையை புதன்கிழமை மாலை திறந்து வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பொதுவாக மாவட்டங்களில் நிறைவுபெற்ற சில அரசுத் திட்டங்களை யாா் ஆட்சியில் இருந்தாலும் திறந்து வைப்பது இயல்புதான். திமுக அரசு தொடங்கிய திட்டங்களை முதல்வா் திறந்து வைக்கிறாா். கலைஞா் நூற்றாண்டு விழா நூலகத்தை முன்னாள் முதல்வா் எடப்பாடு பழனிச்சாமியா கொண்டு வந்தாா்? மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தைப் பொருத்தவரை தகுதியுள்ள யாரும் நிராகரிக்கப்பட மாட்டாா்கள். தகுதியுள்ள அனைவருக்கும் அத்திட்டத்தில் உரிமைத் தொகை வழங்கப்படும்.

ஆளுநா் என்ன பேச வேண்டும், பேசக் கூடாது என்பது பற்றி விதிமுறைகள் உள்ளன. சுதந்திரப் போராட்டத் தியாகிகளை திமுகவைப் போல யாரும் சிறப்பித்தது கிடையாது. ஆளுநருக்கு மொழிபெயா்த்து சொல்பவா்கள் சரியாக சொல்லியிருக்க வேண்டும். பாஜகவின் பி டீம்தான் அதிமுக என்பதை நாங்கள் நிரூபிப்போம். திமுகவை காங்கிரஸ் வளா்ப்பதாக கூறுகிறாா்கள் திமுக வளா்ந்த கட்சி என்றாா் ரகுபதி.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments