இஸ்ரேலையும் இந்திய அரசையும் கண்டித்து மஜக ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலிய  அரசையும், இந்திய அரசையும் கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மஜக மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மீர் அலி தலைமை தாங்கினார். மனித உரிமைகள் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் முனைவர் முபாரக் அலி அனைவரையும் வரவேற்றார். மாநில துணை செயலாளர்கள் அப்துல் சலாம், முகமது ஹாரிஸ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

மஜக மாநில துணை பொது செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், அறந்தாங்கி நகர் மன்ற தலைவர் இரா ஆனந்த், வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பா வரதராஜன், அறந்தாங்கி நகர காங்கிரஸ் தலைவர் முத்து சிவாகிருபாகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இரா.தமிழ்செல்வன், சமாஜ்வாதி கட்சி மாவட்ட தலைவர் சரவணமுத்து, ஒய்எம்ஜே மாவட்ட தலைவர் முஹம்மது ரியாஸ், திராவிடர் கழகம் நகர செயலாளர் பால்ராஜ், சிபிஐ ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன். சிபிஐ நகர செயலாளர் அஜய் குமார் கோஷ், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் தென்றல் கருப்பையா, விசிக ஒன்றிய செயலாளர் முத்தமிழன் நாகமுத்து, அறந்தாங்கி மக்கள் பேரவை தலைவர் ஆண்டோ பிரவீன், எஸ்டிபிஐ மாவட்ட செயலாளர் முகமது அபுதாலிப், முஸ்லிம் லீக் மாவட்ட துணை தலைவர் அப்துல் பாசித் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மஜக மாவட்ட பொருளாளர் செய்யது அபுதாஹிர் அனைவருக்கும் நன்றி கூறினார். மஜக மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது இப்ராஹிம், முகமது யாசின், இஸ்லாமிய கலாச்சார பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது, துணை செயலாளர்கள் மல்லி ஹமீது, நோக்கியா சாகுல், மாவட்ட விவசாயிகள் அணி செயலாளர் நாகூர் கனி, எம்ஜேடிஎஸ் நகர தலைவர் சோலைமலை, மாவட்ட அலுவலக செயலாளர் ரியாஸ் அகமது, மஜக நகர செயலாளர் ஜலாலுதீன், இளைஞர் அணி செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், ஒன்றிய செயலாளர் முகமது அப்துல்லாஹ் கண்டன ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். பெண்களும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேல் அரசையும் இந்திய அரசையும் கண்டித்தும் பாலஸ்தீன் மக்களை  பாதுகாக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments