பாலஸ்தீனில் மருத்துவமனை மீது பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்திய இஸ்ரேலை கண்டித்து புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டினம் & PR பட்டினம் கிளை சார்பில் எஸ்டிபிஐ கட்சி பதாகை ஏந்தி முழக்கம்!


பாலஸ்தீனின் காஸாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக பதாகை ஏந்தி முழக்கம். வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது

கோட்டைப்பட்டினம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டை பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ECR பள்ளிவாசல் அருகில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டிக்கும் விதமாக முழக்கம் நடைபெற்றது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர் குற்றவாளியாக அறிவித்திட ஐ.நா மன்றத்தை வலியுறுத்தி கோஷங்கள் முழக்கப்பட்டன. இந்த நிகழ்வில்SDPI கட்சி நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர்.

PR பட்டினம் 

PR பட்டினம் கிளை புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், எஸ்டிபிஐ கட்சியின்மாவட்டத் தலைவர் U. செய்யது அகமது தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது அஜிஸ்,  கிளை தலைவர் STN ஜாகீர் உசேன், மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் பள்ளிவாசல் முன் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டிக்கும் விதமாக முழக்கம் நடைபெற்றது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர் குற்றவாளியாக அறிவித்திட ஐ.நா மன்றத்தை வலியுறுத்தி கோஷங்கள் முழக்கப்பட்டன. இந்த நிகழ்வில்  ஜமாத் தலைவர் NSM நஜமுதீன், மற்றும் ஜமாத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர்.

P.R.பட்டினம் கிளை
SDPI கட்சி
கிருஷ்ணாஜி பட்டினம் நகரம் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments