வரைவு பட்டியல் வெளியான நிலையில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தபால் மூலம் வினியோகம்




வரைவு பட்டியல் வெளியான நிலையில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தபால் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

வரைவு பட்டியல்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சத்து 51 ஆயிரத்து 559 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 64 ஆயிரத்து 175 பெண் வாக்காளர்களும், 64 மூன்றாம் பாலினத்தவர்களும் என சேர்த்து மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 798 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி முதல் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற திருத்தத்தின்போது 4,392 ஆண் வாக்காளர்களும், 5,371 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் சேர்த்து மொத்தம் 9,766 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தப்பணிகள் வருகிற டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

அடையாள அட்டை

இந்த நிலையில் வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ள புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை தபால் மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "வாக்காளர் அடையாள அட்டை வீடுகளுக்கு நேரடியாக தபால் மூலம் வினியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. முன்பு இ-சேவை மையங்களில் ரூ.50 கட்டணம் செலுத்தி பிரிண்ட் எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது.

தற்போது இந்த வசதி கிடையாது. வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக இலவசமாக அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல திருத்தப்பணிகள் மேற்கொள்ளும் வாக்காளர்களுக்கும் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படுகிறது. அடுத்து வருகிற முகாம்கள் மற்றும் தற்போது நடைபெற உள்ள பணிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள் மற்றும் திருத்தப்பணிகள் மேற்கொள்கிறவர்களுக்கு ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்பு தபால் மூலம் வாக்காளர் அடையாள அட்டை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்'' என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments