தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,292 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன




தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,292 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன.

சம்பா நெல் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடிக்காக நாற்று நடவு பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. சம்பா பருவத்திற்கு வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் உள்ளனர். மழை போதுமான அளவு பெய்தால் விவசாயம் செழிக்கும்.

இதற்கிடையில் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்க வேளாண்மை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

உர மூட்டைகள்

இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் நேற்று உர மூட்டைகள் வந்தன. 21 வேகன்களில் யூரியா 724 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 316 மெட்ரிக் டன், காம்பளக்ஸ் 252 மெட்ரிக் டன் என மொத்தம் 1,292 மெட்ரிக் டன் உர மூட்டைகள் வந்தன. இவை அனைத்தும் தனியார் நிறுவன உரக்கடைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

உர மூட்டைகள் வந்திறங்கியதை வேளாண்மை துறை இணை இயக்குனர் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். புதுக்கோட்டையில் நேற்று லேசாக மழை தூறியபடி இருந்ததால் உர மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாய் போட்டு மூடி லாரிகளில் கொண்டு செல்லப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments