செகந்திராபாத் (ஹைதராபாத்) - இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இந்த வாரம் இரு மார்க்கத்திலும் முழுமையாக ரத்து






திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செல்லும் செகந்திராபாத் (ஹைதராபாத்) - இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை   செகந்திராபாத் (ஹைதராபாத்) - இராமநாதபுரம் 
வாராந்திர சிறப்பு ரயில் சேவை இந்த வாரம் இரு மார்க்கத்திலும் முழுமையாக ரத்து.



செகந்திராபாத் - இராமநாதபுரம் 

செகந்திராபாத் - இராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 07695)
வாராந்திர  சிறப்பு ரயில் புதன்கிழமை தோறும் இரவு 09.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது. பின்னர் அங்கிருந்து  திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி,  வழியாக சென்று வியாழக்கிழமை இரவு 11.45 மணிக்கு இராமநாதபுரம் சென்றடையும்.

இராமநாதபுரம் - செகந்திராபாத் 

இதைப்போல மறுமார்க்கத்தில் இராமநாதபுரம் - செகந்திராபாத் விரைவு ரயில் (வண்டி எண் 07696) 
வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9.50 மணிக்கு இராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு   காரைக்குடி , அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி திருவாரூர், வழியாக சென்னை எழும்பூர் வெள்ளிக்கிழமை  இரவு 9.50‌ மணிக்கு அடையும் பின்னர் மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது. 

எங்கெங்கு நின்று செல்லும் ?

செகந்திராபாத்  (ஹைதராபாத்)
நலகொண்டா, 
மிரியால்குடா, 
சட்டெனப்பள்ளி, 
குண்டூர் ,
தெனாலி, 
பாபட்லா, 
ஓங்கோல்,  
கவாலி ,
நெல்லூர் 
கூடுர்,
சென்னை எழும்பூர், 
செங்கல்பட்டு, 
விழுப்புரம், 
திருப்பாதிரிபூலியூர் (கடலூர்),
சிதம்பரம், 
சீர்காழி, 
மயிலாடுதுறை, 
திருவாரூர், 
திருத்துறைப்பூண்டி, 
முத்துப்பேட்டை,
அதிராம்பட்டினம், 
பட்டுக்கோட்டை, 
அறந்தாங்கி, 
காரைக்குடி, 
சிவகங்கை, 
மானாமதுரை, 
இராமநாதபுரம்,  

ஆகிய ரயில் நிலையங்களில் 
நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

செகந்திராபாத் -  இராமநாதபுரம் - செகந்திராபாத் ரயில் இந்த வாரம் இரு மார்க்கத்திலும் முழுமையாக ரத்து

தெலுங்கானா ஆந்திரா மாநிலம்  பகுதியில் உள்ள ரயில் பாதைகள் பராமரிப்பு பணிகள் காரணமாக 

இன்று அக்டோபர் 04 புதன்கிழமை செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்ட வேண்டிய வண்டி எண் : 07695 ரயிலும் 

நாளை மறுநாள் அக்டோபர் 06 வெள்ளிக்கிழமை இராமநாதபுரத்தில்  இருந்து புறப்பட்ட வேண்டிய வண்டி எண் : 07696 ரயிலும் 

இந்த வாரம் இரு மார்க்கத்திலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் 
இந்த ரயிலில் பயணம் செய்ய முடிவு செய்தவர்கள் மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள்..

அடுத்த வாரம்  முதல் வாரத்திர ரயில் சேவைகள் இருமார்க்கத்திலும் வழக்கம் போல  இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது



 
இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments