அறந்தாங்கி ரயில் நிலையத்தில் விரைவில் கணினி முன்பதிவு மையம் - திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் தகவல் அறந்தாங்கி வர்த்தக சங்கம் & அறந்தாங்கி கோட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில், திருச்சி ரெயில்வே கோட்ட பொது மேலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்


அறந்தாங்கி ரயில் நிலையத்தில் விரைவில் கணினி முன்பதிவு மையம் - திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் தகவல் அறந்தாங்கி வர்த்தக சங்கம் & அறந்தாங்கி கோட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில், திருச்சி ரெயில்வே கோட்ட பொது மேலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது 

அதில், அறந்தாங்கி ரெயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க கணினி முன்பதிவு மையம் வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். 

அதற்கு கோட்ட மேலாளர் அறந்தாங்கியில் விரைவில் கணினி முன்பதிவு மையம் திறக்கப்படும் என்று கூறினார்.

இன்று 18.10.2023 அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பாக 

திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளர் உயர்திரு.அன்பழகன் ஐ ஆர் டி எஸ் அவர்களை திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நேரில் சந்தித்து அறந்தாங்கி மக்களின் முக்கிய ரயில் நிலைய கோரிக்கையான கணினி முன்பதிவு மையம் திறக்க அறந்தாங்கியில் நேரில் வழங்கிய கோரிக்கை  மனுவிற்கு    நினைவுட்டல் மனு வழங்கப்பட்டது. 

அதற்கு பொது மேலாளர் அவர்கள் உங்களின் கோரிக்கை மனு மீது ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும்  விரைவில் கணினி முன்பதிவு மையம் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உடனடி நடவடிக்கையாக  உரிய அலுவலரிடம் விரைந்து ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார்.

திருச்சி ரயில்வே கோட்ட பொது மேலாளருக்கு அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் அறந்தாங்கி கோட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

விரைவில் அறந்தாங்கியில் கணினி முன்பதிவு மையம் செயல்பட உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments