மணமேல்குடியில் பட்டாசு கடையில் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் நாசம்

  
மணமேல்குடியில் மின் கசிவினால் வெடிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து. 

இவர் மணமேல்குடி கடைவீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏகேஎம் டிரேடர்ஸ் என்ற வெடிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
 
இந்நிலையில் நேற்று செப்டம்பர் 08 காலை பூட்டியிருந்த கடையில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் கடையிலிருந்த 40 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் மளமளவென வெடித்து சிதறியுள்ளது. 

அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்ததன் பெயரில் தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டுள்ளது. பூட்டியிருந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் ஏதும் இல்லை. 

சம்பவம் குறித்து மணமேல்குடி காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி வியாபாரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தீ விபத்தில் சேதமடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments