புதுக்கோட்டை - ஜெய்ப்பூர் இராமேஸ்வரம் - ஃபெரோஸ்பூர் வாரந்திர ஹம்சாபர் அதிவிரைவு ரயிலில் இந்தியாவின் இளஞ்சிவப்பு (Pink City) நகரத்திற்கு இன்பச்சுற்றுலா செல்லலாம்


03/10/23 முதல் ஒவ்வொரு வாரமும் நமது புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இளஞ்சிவப்பு(Pink City) நகரம் என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் சென்று வர நேரடி ரயில் சேவையை பெறுகிறது. 

இளஞ்சிவப்பு நகரம் என அழைக்கப்பட காரணம்?

" _1876 ஆம் ஆண்டில், மகாராஜா ராம் சிங், பிரிட்டனின் ராணி விக்டோரியாவின் வருகைக்கு தயாராகும் வகையில், விருந்தோம்பலின் வண்ணம்-பெரும்பாலான கட்டிடங்களுக்கு இளஞ்சிவப்பு வண்ணம் பூசப்பட்டபோது ஜெய்ப்பூர் "பிங்க் சிட்டி" என்று அறியப்பட்டது"_ 

ஜெய்ப்பூர் சந்திப்பிற்கு அருகில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள்:

1. ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம்[Albert hall Museum]- 5 கிமீ 

2. ஜந்தர் மந்தர்[Jantar Mantar]-5.4 கிமீ 

3. நகர அரண்மனை[City Palace]-5.5 கிமீ 

4. ஹாவா மஹால்[Hawa mahal]- 1000 ஜன்னல்களை கொண்டது.(6கிமீ)

5. ஜல் மஹால் [Jal Mahal]- 10.8 கிமீ 

6. அமர் கோட்டை[Amer Fort]-14 கிமீ

புதுக்கோட்டையிலிருந்து ஜெய்ப்பூர் சென்று வர நேரடி AC ரயில் சேவை: 

20974/ராமேஸ்வரம்-பெரோஸ்ப்பூர் ஹம்சபார் ரயில் 

புதுக்கோட்டை-01:50 am(செவ். இரவு புதன் கணக்கில் வரும்) புறப்படும் 

ஜெய்ப்பூர்- 01:15 am(வியாழன் இரவு வெள்ளி கணக்கில் வரும்) செல்லும் 
 
கட்டண விவரம்:

3 அடுக்கு AC - ₹2720/-
படுக்கை வசதி -  ₹1050/-_

20973/பெரோஸ்ப்பூர்-ராமேஸ்வரம் ஹம்சபார் ரயில் 

ஜெய்ப்பூர்-  05:30 pm சனி மாலை புறப்படும் 

புதுக்கோட்டை- 03:58 pm திங்கள் மதியம் வரும் 

புதுக்கோட்டை வாசிகள் இந்த அரிய ரயில் சேவையை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக்கொள்ளவும்

நமது நாட்டின் கலாச்சார சின்னங்களை கண்டு ரசிக்கவும்!

PC & News Credit : Pudukottai Rail Users 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments