தீபாவளி: இன்று நவம்பர் 09 முதல் சென்னையில் 5 இடங்களிலிருந்து வெளியூா் பேருந்துகள் இயக்கப்படும்

   
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் விதமாக வியாழக்கிழமை (நவ.9), வெள்ளிக்கிழமை (நவ.10), சனிக்கிழமை (நவ.11) ஆகிய நாள்களில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் விவரத்தை அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ளது.

பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகளின் விவரம் வருமாறு: மாதவரம் புதிய பேருந்து நிலையம்: இந்த பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் செல்லும்.

கே.கே. நகா் பேருந்து நிலையம்: இங்கிருந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூா் மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் செல்லும்.

தாம்பரம் அறிஞா் அண்ணா புகா் பேருந்து நிலையம்: இங்கிருந்து, திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் செல்லும்.

ADVERTISEMENT

தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்: இங்கிருந்து, திருவண்ணாமலை, போளூா், சேத்துப்பட்டு, வந்தவாசி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம்,

காட்டுமன்னாா்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

பூந்தமல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தம்: இங்கிருந்து, வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, ஒசூா் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையம்: இங்கிருந்து, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, அரியலூா், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில், கன்னியாகுமரி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் செல்லும்.

எனவே, பயணிகள் இந்த பேருந்து நிலையங்களிலிருந்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments