தாய்லாந்து போக ரெடியா? விசா தேவையில்லை... இந்தியர்களுக்கு அடிச்ச ஜாக்பாட் ஆஃப்ர்
இந்தியாவில் இருந்து தாய்லாந்து சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் விசா இல்லாத பயணம் மேற்கொள்ளும் வகையில் அருமையான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது எத்தனை மாதங்களுக்கு அமலில் இருக்கும்? வேறு என்னென்ன சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன? போன்ற விவரங்களை விரிவாக இங்கே அலசலாம்.

விசா இல்லாமல் வெளிநாடு சுற்றுலா போக விரும்பும் நபரா நீங்கள்? அப்படியெனில் இந்த செய்தி உங்களை மகிழ்ச்சி கடலில் தள்ளிவிடும் என்பதில் சந்தேகமில்லை. முன்னதாக இலங்கை செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று சலுகை அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதாவது மார்ச் 31, 2024 வரை விசா இல்லாமல் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகள் இடம்பெற்றிருந்தன.

தாய்லாந்து சுற்றுலாத்துறை அறிவிப்பு


இதேபோல் தற்போது தாய்லாந்து நாடும் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை (Thai Tourism) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 10, 2023 முதல் மே 10, 2024 வரை ஆறு மாத காலத்திற்கு தாய்லாந்து வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. இந்த சலுகையை பயன்படுத்தி தாய்லாந்து நாட்டில் 30 நாட்கள் வரை தங்கி கொள்ளலாம். அதன்பிறகு செல்லுபடியாகாது. தாய்லாந்து நாட்டை பொறுத்தவரை சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்றது.விசா இல்லா பயணம்

எம்ரால்டு புத்தா கோயில், பிடிஎஸ் ஸ்கை ரயில், ஜிம் தாம்சன் ஹவுஸ், பனானா கடற்கரை என அடுக்கடுக்கி கொண்டே செல்லலாம். இந்த சூழலில் இந்தியா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இருந்து அதிகப்படியான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் விசா இல்லாத பயணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் சீனா சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சிறப்பான ஓர் அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்கள் வெளிநாட்டு சுற்றுலாகொரோனா நெருக்கடி காலகட்டத்திற்கு பின், சர்வதேச சுற்றுலா மீது இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். தாய்லாந்து நாட்டிற்கு வருகை புரியும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 4வது இடம் என்பது கவனிக்கத்தக்கது. மலேசியா, சீனா, தென் கொரியா ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.

வெளிநாட்டு பயணம் அதிகரிப்பு

நடப்பாண்டில் மட்டும் தாய்லாந்து நாட்டிற்கு 12 லட்சம் இந்தியர்கள் சென்று வந்துள்ளனர். இந்திய அரசின் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இந்தியர்களின் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிகிறது. 2011ஆம் ஆண்டு 1.4 கோடியாக இருந்த எண்ணிக்கை, 2019ல் 2.7 கோடியாக உயர்ந்துள்ளது.


கட்டுப்பாடுகள் விதிப்பு

அதன்பிறகு கொரோனா நெருக்கடி காலம் ஏற்பட்டது. வெளிநாடு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் 2022ல் 2.1 கோடியாக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை வந்தது. 2022 நிலவரப்படி, இந்தியர்கள் தங்களது வெளிநாட்டு சுற்றுலாவிற்கு தேர்வு செய்யும் டாப் 10 நாடுகளின் பட்டியலை பார்த்தால்,

டாப் 10 நாடுகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (59 லட்சம்)
சவுதி அரேபியா (24 லட்சம்)
அமெரிக்கா (17 லட்சம்)
சிங்கப்பூர் (9.9 லட்சம்)
தாய்லாந்து (9.3 லட்சம்)
இங்கிலாந்து (9.2 லட்சம்)
கத்தார் (8.7 லட்சம்)
குவைத் (8.3 லட்சம்)
கனடா (7.7 லட்சம்)
ஓமன் (7.2 லட்சம்)
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments