மணமேல்குடி வட்டார வள மையத்தில் வீடு சார்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு டயப்பர் மற்றும் நாப்கின்கள் வழங்கப்பட்டன
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மஞ்சுளா வழிக்காட்டலின் படி வட்டார வள மையத்தில் நடைபெற்ற  உள்ளடக்கிய கல்வி, வீடு சார்ந்த மாணவர்களுக்கு டயப்பர் மற்றும் நாப்கின் வழங்கும் நிகழ்விற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் தலைமை வகித்தனர். 

ஆசிரியர் பயிற்றுநர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார்.

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் மூலம் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளடக்கிய கல்வி, வீடு சார்ந்த மாணவர்களுக்கு டயப்பர் மற்றும் நாப்கின்கள் 42 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


இக்கூட்டத்தில்  மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள், சிறப்பாசிரியர்கள், கோவேந்தன், மணிமேகலை மற்றும் இயன்முறை மருத்துவர் செல்வகுமார் பகல் நேர பாதுகாவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments