வெள்ளாற்றில் கருவேல மரங்களை அகற்றி, கரையை பலப்படுத்த வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் தீர்மானம்
ஆவுடையார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் காமாட்சி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் செலவு நிதி வசூல் செய்தல், விவசாய சங்க பேரவை நடத்துதல், இளைஞர் பெருமன்றம், மகளிர் அமைப்புகள் அமைத்தல் உள்ளிட்ட கட்சியினுடைய எதிர்கால இயக்கம் பற்றி பேசினார். கூட்டத்தில் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முறையாக காப்பீட்டுத் தொகை வழங்கப்படாததால் 60 சதவீத விவசாயிகள் பாதிப்புக்குள்ளானார்கள். எனவே அனைவருக்கும் பயிர் இன்சூரன்ஸ் காப்பீட்டு இழப்பு தொகை முழுமையாக வழங்க வேண்டும். வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், பூச்சி மருந்துகள், களைக்கொல்லிகள் ஆகியவற்றை 100 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும். வெள்ளாற்றில் மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments