திருக்குரானை 24 மணி நேரத்தில் கைகளால் எழுதி உலக சாதனை படைத்த அன்னை கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
குரானை கைகளால் எழுதி சாதனை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஜன்னத்துல் பிர்த்ஹவுஸ் அரபி மதரஸா ஆலிமா வகுப்பு மாணவிகள் 20 பேர் திருக்குரான் முழுவதையும் 24 மணி நேரத்தில் கைகளால் எழுதி முடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதற்கான சாதனை முயற்சி வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் டேலண்ட் கவுன்சிலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இந்த சாதனை முயற்சியில் வெற்றி பெற்ற 20 மாணவிகளுக்கு பாராட்டு விழா கல்லூரியில் நடந்தது.
பாராட்டு சான்றிதழ்
விழாவிற்கு அன்னை கல்வி குழும தாளாளர் அப்துல் கபூர் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மாணிக்க வாசுகி முன்னிலை வகித்தார். ரைஹானா பேகம் வரவேற்றார். ஜியாவுதீன் பாகவி தொடக்க உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக தொண்டி முஸ்தபா ராஹாதி, எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க நிறுவனர் சலீம், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில செயலாளர் சிக்கந்தர், முஸ்லீம் லீக் மாநில செயலாளர் ஷாஜஹான் ஆகியோர் வாழ்த்தி பேசினர். வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் டேலண்ட் கவுன்சில் இயக்குனர் சிவா, புனித குரானை கைகளால் 24 மணி நேரத்தில் எழுதி உலக சாதனை படைத்த 20 மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் மாவட்ட அரசு காஜி நீடூர் முகமது இஸ்மாயில், ஜமாத் நிர்வாகி அய்யூப் கான் மற்றும் மார்க்க அறிஞர்கள், ஜமாத் தார்கள், அன்னை கல்வி குழுமத்தின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.