ஆவுடையார்கோவில் அருகே சரக்கு வேனில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஆவுடையார்கோவில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது கருப்பூர் அருகே சரக்கு வேன் ஒன்று பஞ்சராகி நின்று கொண்டிருந்தது. இதைப்பார்த்த போலீசார் அந்த சரக்கு வேனை சோதனை செய்தனர். சோதனையில் சரக்கு வேனில் ரேஷன் அரிசியை கடத்தி வந்தது திருமயம், மாங்குடியை சேர்ந்த டிரைவர் ராமச்சந்திரன் (வயது 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து ேபாலீசார் ராமச்சந்திரனை கைது செய்து, ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகள், சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து, குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments