அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை




அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலத்தின் தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலை

அதிராம்பட்டினத்தில் இருந்து முத்துப்பேட்டைக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் ஆர்ச் அருகே சாலையையொட்டி, பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் தடுப்பு சுவர், சில மாதங்களுக்கு முன், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த தடுப்பு சுவர் இதுவரை சீரமைக்கப் படவில்லை.

விபத்துகள்

கிழக்கு கடற்கரை சாலையில் ராமேஸ்வரம், தூத்துக்குடி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், காரைக்கால், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல இரவு பகல் என எந்த நேரமும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரா வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் மாடுகள் குறுக்கே நிற்பதாலும் வெளிச்சம் இல்லாததாலும் இந்த பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.

சீரமைக்க வேண்டும்

தடுப்பு சுவரை சீரமைத்தால், விபத்துகள் தவிர்க்கப்படும். இந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் கூலி தொழிலாளர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் விபத்து அச்சத்தில் தவிக்கும் நிலை உள்ளது. எனவே இ்டிந்து விழுந்த தடுப்பு சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments