கொத்தமங்கலத்தில் முன்னாள் மாணவர்களால் புதுப்பொலிவு பெற்ற அரசு பள்ளி பொதுமக்கள் பாராட்டு




கொத்தமங்கலம் அரசு பள்ளி கட்டிடங்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றது. பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அரசு பள்ளி

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த முன்னாள் மாணவர்கள் ஏராளமானவர்கள் டாக்டர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த அரசு பள்ளி கட்டிடங்கள் பல வருடங்களாக வர்ணம் தீட்டப்படாமலும், ஜன்னல் கம்பிகள், கதவுகள் உடைந்தும் காணப்பட்டது. இதனை மாற்றி சீரமைக்க பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்த தொடங்கி உள்ளனர்.

புதியவா்ணம்

முன்னாள் மாணவர்கள் வாட்ஸ்-அப் குழு மூலம் இணைந்து முதலில் பள்ளி கட்டிடங்கள் சுத்தம் செய்யப்பட்டு உடைந்த பகுதிகளை சீரமைத்து அனைத்து கட்டிடங்களுக்கும் புதிய வர்ணம் தீட்டியதுடன் நவீன வகுப்பறைகள் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிகளுக்காக முன்னாள் மாணவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் முன்னாள் மாணவர்களின் ஆர்வமான பணிகளை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் தங்கள் செலவில் பள்ளி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்துள்ளனர். தொடர்ந்து சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்று வரும் அரசு பள்ளியை அனைவரும் பார்த்து பொதுமக்கள் பாராட்டி செல்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments