பாக்ஜல சந்தி பகுதியில் கடல் சீற்றம் காரணமாக அரியமான், பிரப்பன்வலசை முதல் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசி, தாழை செடிகள் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
கடல் சீற்றம்
தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக வடக்கு கடலான பாக் ஜலசந்தி கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடல் நீரோட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் கடலும் சீற்றமாகவே உள்ளது.
இந்த நிலையில் பாக்ஜல சந்தி பகுதியில் கடல் சீற்றம் மற்றும் நீரோட்டம் காரணமாக கடலின் அடியில் வளர்ந்து நிற்கும் பாசி மற்றும் தாழை செடிகள் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரை முதல் பிரப்பன்வலசை, ஆற்றங்கரை அழகன்குளம் சித்தார் கோட்டை கடற்கரை என சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதிகளில் குவியல் குவியலாக கரை ஒதுங்கி கிடக்கின்றன.
கரை ஒதுங்கின
இதேபோல் ராமேசுவரம் சேரான்கோட்டை கடற்கரை முதல் கோதண்டராமர் கோவில் கடற்கரை வரையிலும் பாசி செடிகளும், தாழை செடிகளும் கடற்கரை பகுதி முழுவதும் கரை ஒதுங்கி கிடக்கின்றன. இதனை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.