மணமேல்குடி ஒன்றியத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாமிற்கான விழிப்புணர்வு பேரணி




புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மருத்துவ மதிப்பீட்டு முகாமிற்கான விழிப்புணர்வு பேரணி மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் தலைமையில் தொடங்கியது.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி அவர்களின் முன்னிலை வகித்தார்

 ஊராட்சி மன்ற தலைவர்  மஞ்சுளா நடேசன் அவர்கள்  சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டு கொடி அசைத்து மருத்துவ மதிப்பீட்டு  முகாமிற்கான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் வரும் நவம்பர் 16ஆம் தேதி அன்று நடைபெறும் மருத்துவ முகாம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பேரணியானது  மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடங்கி 
அரசு மருத்துவமனை வழியாக மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகம் 
கிழக்கு கடற்கரை  கடைவீதி வழியாக
மணமேல்குடி 
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு தேசிய அடையாள அட்டை ,
உதவி உபகரணங்கள் கல்வி உதவித்தொகை ஆகியவற்றை பெற்று பயனடையுமாறு கோஷங்களை  எழுப்பி  மாணவர்கள் முழக்கமிட்டு இப்பேரணியானது நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயன் முறை மருத்துவர் செல்வகுமார் சிறப்பாசிரியர்கள் லதா மணிமேகலை கோவேந்தன் மற்றும் பள்ளியின் ஆசிரியர் அடைக்கலம் தற்காலிக ஆசிரியர் உதய நிலா ஆகியோர் கலந்து கொண்டனர்









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments